பட்டாம்பூச்சி தன் சிறகால்
மெலிதாய் என் முகம் அறைந்து சென்றது
மழைக்காற்றில் சிறகடித்து
என் முகம் அறைந்த அவள் துப்பட்டா...
Wednesday, May 19, 2010
சிந்தும் அன்பு மழை
நடு இரவைத் தாண்டி வானில் பேய் இடி ...
அய்யோ! அவள் பயந்து போவாளே
என்று பதறிப்போய் அழைத்தேன்
செல்போனில் சிந்தியது அன்பு மழை!
அய்யோ! அவள் பயந்து போவாளே
என்று பதறிப்போய் அழைத்தேன்
செல்போனில் சிந்தியது அன்பு மழை!
Sunday, April 11, 2010
பேரின்பத்தின் ஒரு துளி
ஆசைகள் அனைத்தும் மறந்து கிடந்தேன்
சில நொடிகள்...
மூடிய விழிகளின் முன்னே
நட்சத்திரங்கள் இல்லாத வானம் விரிந்தது
அதில் துள்ளிக் குதித்து
மண்டியிட்டு
பின் படுத்துக் கொண்டு
அத்தனை வானத்தையும்
இழுத்துப் போர்த்தி
அந்த வெதுவெதுப்பில்
கண் அயர்ந்தேன் சில நொடியில்!
பின் இருளென்னும் சூனியத்தில்
மிதந்திருந்தேன் தனிமையில்!
சில நொடிகள்...
மூடிய விழிகளின் முன்னே
நட்சத்திரங்கள் இல்லாத வானம் விரிந்தது
அதில் துள்ளிக் குதித்து
மண்டியிட்டு
பின் படுத்துக் கொண்டு
அத்தனை வானத்தையும்
இழுத்துப் போர்த்தி
அந்த வெதுவெதுப்பில்
கண் அயர்ந்தேன் சில நொடியில்!
பின் இருளென்னும் சூனியத்தில்
மிதந்திருந்தேன் தனிமையில்!
வீடு தொலைத்த உயிர்
மனிதப் பிறவியாய்ப் புரண்டு
உழன்று கிடக்கும்
விந்தை ஏன்?
இந்த மாயை ஏன்?
என் மரணத்தின் விடை அறியாமல்
இதே கேள்வியைக் கேட்டுச் சலிக்கிறேன் என்றும்!
உழன்று கிடக்கும்
விந்தை ஏன்?
இந்த மாயை ஏன்?
என் மரணத்தின் விடை அறியாமல்
இதே கேள்வியைக் கேட்டுச் சலிக்கிறேன் என்றும்!
Sunday, November 29, 2009
யோகி aka Tsotsi!!!
யோகியான Tsotsi யைப் படிக்க இங்கே சுட்டவும் : http://www.tsotsi.com/english/index.php?m1=film
தமிழில் தரமான நல்ல கதைகளுக்குப் பஞ்சமில்லை. அவற்றைத் திறம்படப் படமாக்க தயாரிப்பளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் தான் பஞ்சம். எல்லாம் வெற்றியின் மேல் இருக்கும் பயம். இங்கே வெற்றி எனப்படுவது முதலீடு செய்த பணத்திற்கு இலாபம் பார்ப்பது அல்லது image எனப்படும் புகழின் மாயப்பிடியைத் தக்க வைத்துக் கொள்வது!!!
இதில் இளிச்சவாயன்கள் யாரென்றால் நம்மைப் போன்ற திரைப்பட இரசிகர்கள்!
பணம் தான் பிரச்னைன்னா தலை சிறந்த இயக்குனர்கள்னு பட்டம் வாங்குனவங்க எல்லாம் கலைக்காக வருஷத்துக்கு நூறு குறும்படங்களையோ குறைந்த Budget படங்களையோ எடுத்து வியாபாரம் பண்ணிப் பாருங்க. வேற்று மொழிப்படங்களோட கதையைத் தழுவி (எங்கள் பார்வையில் 'திருடி') படம் எடுக்கறீங்களே, அதே போல அவங்களோட வியாபார தந்திரத்தையும் (எ.கா., Paranoid Series) தழுவி அல்லது திருடியாவது தரமான திரைப்படங்களைக் கொடுத்து எங்களைத் தமிழ்த் திரைப்பட இரசிகர்களாய் பெருமை படச் செய்யுங்களேன்!

இதுவரை கண்டெடுத்த கண்கள்!
'கண்கள் இரண்டொழிய வேறில்லை' என நினைத்து
ஏமாந்து இருந்தேன்.
கனவுகள் கொடுத்து
என் மனக்கண்ணைத் திறந்து வைத்தாய்,
அந்தக் கனவுகளை அழிக்கும்
சூத்திரம் கற்றுக் கொடுத்து
அறிவுக்கண்ணையும் திறந்து வைத்தாய்!
இன்னமும் எத்தனை கண்கள் உள்ளதென
ஆச்சர்யப்பட்டு அதிர்ச்சியில் கிடக்கிறேன் நான்!

இன்றும் கழிகிறது
நேற்றைய நிகழ்வுகளையும்
நாளைய கனவுகளையும்
மன அலமாறியில் இருந்து
எடுத்துப் படித்துக் களைத்துப் போகிறேன்.
மதியவேளைப் பட்டினியில்
புரண்டு படுத்துக் கண்மூடும் போது சொல்லிக்கொள்கிறேன்
'நாளை நலமாய் இருக்கும்' என்று!
நாளைய கனவுகளையும்
மன அலமாறியில் இருந்து
எடுத்துப் படித்துக் களைத்துப் போகிறேன்.
மதியவேளைப் பட்டினியில்
புரண்டு படுத்துக் கண்மூடும் போது சொல்லிக்கொள்கிறேன்
'நாளை நலமாய் இருக்கும்' என்று!
Thursday, November 19, 2009
WOW!!!
இந்தத் தொழில்நுட்பத்திற்குப் பெயர் ஆறாம் அறிவு!!! தெளிவாய்ச் சொல்லப் போனால், இது கணினியை நம் உடலில், உயிரில் புகுத்தும் முயற்சி...
Tuesday, November 10, 2009
மகிழ்ச்சி
மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்,
மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
- உன்னோடு சேர்ந்து சிரித்த போது
நான் உலகுக்குச் சொன்னது!
மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
- உன்னோடு சேர்ந்து சிரித்த போது
நான் உலகுக்குச் சொன்னது!
Subscribe to:
Posts (Atom)