Sunday, April 11, 2010

பேரின்பத்தின் ஒரு துளி

ஆசைகள் அனைத்தும் மறந்து கிடந்தேன்
சில நொடிகள்...

மூடிய விழிகளின் முன்னே
நட்சத்திரங்கள் இல்லாத வானம் விரிந்தது
அதில் துள்ளிக் குதித்து
மண்டியிட்டு
பின் படுத்துக் கொண்டு
அத்தனை வானத்தையும்
இழுத்துப் போர்த்தி
அந்த வெதுவெதுப்பில்
கண் அயர்ந்தேன் சில நொடியில்!

பின் இருளென்னும் சூனியத்தில்
மிதந்திருந்தேன் தனிமையில்!

வீடு தொலைத்த உயிர்

மனிதப் பிறவியாய்ப் புரண்டு
உழன்று கிடக்கும்
விந்தை ஏன்?
இந்த மாயை ஏன்?

என் மரணத்தின் விடை அறியாமல்
இதே கேள்வியைக் கேட்டுச் சலிக்கிறேன் என்றும்!

அந்தஸ்து

புவி ஈர்ப்புவிசை மட்டும் இல்லாவிட்டால்
மேல் என்றும்
கீழ் என்றும்
ஏதும் இல்லை!