Sunday, November 29, 2009

யோகி aka Tsotsi!!!

யோகியான Tsotsi யைப் படிக்க இங்கே சுட்டவும் : http://www.tsotsi.com/english/index.php?m1=film

தமிழில் தரமான நல்ல கதைகளுக்குப் பஞ்சமில்லை. அவற்றைத் திறம்படப் படமாக்க தயாரிப்பளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் தான் பஞ்சம். எல்லாம் வெற்றியின் மேல் இருக்கும் பயம். இங்கே வெற்றி எனப்படுவது முதலீடு செய்த பணத்திற்கு இலாபம் பார்ப்பது அல்லது image எனப்படும் புகழின் மாயப்பிடியைத் தக்க வைத்துக் கொள்வது!!!

இதில் இளிச்சவாயன்கள் யாரென்றால் நம்மைப் போன்ற திரைப்பட இரசிகர்கள்!

பணம் தான் பிரச்னைன்னா தலை சிறந்த இயக்குனர்கள்னு பட்டம் வாங்குனவங்க எல்லாம் கலைக்காக வருஷத்துக்கு நூறு குறும்படங்களையோ குறைந்த Budget படங்களையோ எடுத்து வியாபாரம் பண்ணிப் பாருங்க. வேற்று மொழிப்படங்களோட கதையைத் தழுவி (எங்கள் பார்வையில் 'திருடி') படம் எடுக்கறீங்களே, அதே போல அவங்களோட வியாபார தந்திரத்தையும் (எ.கா., Paranoid Series) தழுவி அல்லது திருடியாவது தரமான திரைப்படங்களைக் கொடுத்து எங்களைத் தமிழ்த் திரைப்பட இரசிகர்களாய் பெருமை படச் செய்யுங்களேன்!

3 comments:

☼ வெயிலான் said...

கவிதைலருந்து விமர்சனம் வரைக்கும் வந்தாச்சா?

கிர்பால் said...

எல்லாம் ஒரு ஆதங்கம் தான் வெயிலான்.

ஜோதிஜி said...

உங்கள் பழைய கவிதைகள் மொத்தமும் படித்தேன். அதையே அதைப் போல பங்களிப்பில் கவனம் செலுத்துங்கள். மிக சிறப்பாக இருந்தது.