Tuesday, November 10, 2009

கனவுகளைத் துரத்தியவன்!!!

இதுவரையில்
என் கனவுகளையெல்லாம்
மலையுச்சிக்கு அழைத்துச்சென்று
கீழே தள்ளிக் கொன்று கொண்டிருந்தேன்!

நேற்று வந்த ஒரு கனவு
தள்ளிவிடும் தருணத்தில் தள்ளி நின்று
என்னை விழவைத்துவிட்டது
பள்ளத்தாக்கினுள்!

இன்னமும் சாகாமல்
மீளாமல்
உயிர்பிழைத்துக் கொண்டிருக்கின்றேன்
என் இன்னபிற கனவுகள் விழுந்து இறந்த
பள்ளத்தில்!

1 comment:

RaGhaV said...

//இன்னமும் சாகாமல்
மீளாமல்//
அற்புதமான நிலை-விளக்கம்.. :-)

அட்டகாசமான கவிதை.. :-)