Monday, May 23, 2011

சேருமிடம்!

இறந்ததில்லை!

சேருமிடம் அறிந்ததில்லை!

விட்டோடாத ஆசைகளை
அறவே அழித்ததில்லை!

பெற்றதும் இழந்ததும்
எவை எவை? தெரியவில்லை!

கட்டில் அடங்கா கனவுகளைக் கொன்று அழித்தும்
அவை சாகவில்லை!

உள்ளம் கொள்ளும் உணர்ச்சிகளின் பிறப்பிடம்
எதுவென்றே புரியவில்லை!

இந்த நொடி மறைந்து அடுத்த நொடி தோன்றுவதை
கண்களால் கண்டதில்லை!

உறவென்னும் நட்பென்னும், காதலென்னும் கட்டுக்கள்
மூளையின் எந்த மடிப்பில் பதிந்துள்ளன?
ஒன்றுமே விளங்கவில்லை!

இல்லாத கடவுள் இல்லாது போன இடத்தில்
உலகமும் இல்லாது போயிருந்தால்
இல்லாமை என்னும் வெற்றிடத்தில் அமிழ்ந்து போயிருப்பேனோ
ஆனந்தமாய்..?

1 comment:

அன்பேசிவம் said...

என்னாச்சு நண்பா! ஏதோ விரக்தியின் உச்சத்தில் எழுதியது போல இருந்தாலும் அருமை...:-)