"கொசு கடிச்சிருச்சு! கொசு கடிச்சிருச்சு"
என்று ஊரே கூடிப் பழிசுமத்த,
அது பொறுக்காத கொசுக்கள்
ஊர் முழுக்கப் படை எடுக்க,
நேற்று இரவு
மின்சாரம் புட்டுக்கொள்ள,
காத்தாடி ஓய்ந்து நிற்க,
ஆல் அவுட்டும் தூங்கிப்போக,
நடுநிசியில் மாட்டிக்கொண்டேன்!!!
இடைவிடாது கடித்துக்
காதில் ரீங்காரம் இட்டுக் கொக்கரித்தன
பொல்லாத கொசுக்கள்!
வில்லத்தனமான ரீங்காரத்தை மொழிப்பெயர்த்ததில்...
"நான் கடிக்கிறேனா? நான் கடிக்கிறேனா?
இதுக்குப் பேரு உங்க ஊருல கடிக்கிறதா?
இன்னைக்கு உன்னோட O+ காலிடா..."

3 comments:
இத படிசிட்டு, சும்மா விழுந்து விழுந்து சிரிச்சேன் மச்சி..
அவனவன கடிச்சாதான் தெரியும் கொசுவும் காதலியும்.. என்ன நான்ஞ் சொல்றது? ;-)
You are rite machi... ;)
தம்பி, உன்னை கொசு கடிச்சதுக்காக எங்கள இந்த கடி கடிக்க கூடாது.
Just Kidding.
Very nice
Post a Comment