நேற்று இரவு கண்ட கனவில்,
உச்சி வெயிலில்
வெண்மணலில் ஓடுகின்றேன்...
ஒற்றைப் பனைமரத்தின் நிழலில் நின்று
உச்சியில் இருக்கும் காக்கையை நோக்கி கை நீட்டுகின்றேன்...
ஒரு பெரிய சுழல் வந்து பனைமரத்தை தூக்கிச் சென்றது...
காகம் பட்டாம்பூச்சியாக உருமாறி பறந்து சென்றது...
வெயில் என் கன்னத்தில் ஏறியது...
சட்டென்று விழித்துப் பார்க்கையில்,
மின்தடையால் மின்விசிறி கிரீச்சிட்டு கொண்டே சுற்றி நின்றது!