ஆச்சர்யப்பட்டேன்!
யார் காணாமல் போனாலும்
அறிவிக்கும்
தொலைக்காட்சிப் பெட்டியைக் கண்டு...
பக்கத்துத் தெரு
கோவிந்து மாமா காணாமல் போனபோதுகூட
அறிவித்திற்று!
தெருவே அதை
அரிதாகவும் பரபரப்பாகவும்
பேசிக்கொண்ட போது
அம்மாவிடம் கேட்டேன்,
'காணாம போன என்னோட சிலேட்ட ஏம்மா
காட்டமாட்டேங்குது?'
அம்மா சொன்னாள்,
'மனுசங்க காணாமப் போனா மட்டுந்தான்டா
சொல்லும்'.
ஆர்வம் பொங்கிய
நாள் ஒன்றில்
காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புக்குச்
சற்று முன்
கட்டிலுக்குக் கீழே ஒளிந்து கொண்டேன்!
கற்பனையில்
கேட்டு ரசித்தேன்,
'காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு...
பெயர், கிர்பால்...
வயது, ஆறு...
காணாமல் போன போது
பச்சை நிற சட்டையும்
அரை டிரவுசரும் அணிந்திருந்தான்!'
புன்னகைத்தபடியே
காதைத் தீட்டி வைத்தேன்!
அறிவிப்பும் முடிந்தது
என் பெயரும் அறிவிக்கப்படவில்லை!
வெளியே எழுந்து சென்று
தொலைக்காட்சிப் பெட்டியைக்
கோபமாய் முறைத்துக் கொண்டிருந்தேன்!
எனைக் கண்டு
அம்மா கேட்டாள்,
'இத்தன நேரம் எங்கடா கண்ணு போயிருந்த?'
உள்ளிருந்து விம்மியபடியே
கண்ணீர் விட்டு அழத்தொடங்கியிருந்தேன்!
19 comments:
மிக அருமை கிர்பால்..
மச்சி, நானும் காணாமப்போயி பல காலம் ஆகுது.. என்னோட பேர என்னைக்காவது TVல சொன்னாங்களா..?
அற்புதமான கற்பனை..:-)
அருமையான கவிதை.. :-)
ஒரு குழந்தையின்
மனநிலை
பிரதிபலிக்கபட்டுள்ளது!
வேர்டு வெரிபிகேஷனை தூங்குங்க!
வால்,
//வேர்டு வெரிபிகேஷனை தூங்குங்க!//
???
அழகான கற்பனை. நல்லா இருக்கு கிர்பால்.
பின்னூட்டம் போடும்போது 'Word verification' என்று ஒரு option இருக்கு. பின்னூட்டம் போட வருபவர்களுக்கு அது ஒரு இடைஞ்சல். அதைத்தான் வால்பையன் சொல்கிறார்.
அனுஜன்யா
வாழ்த்துக்களுக்கு நன்றி, செந்தில், ரகு, வால், அனுஜன்யா.
word verification நீக்கியாயிற்று.
கவிதை அழகு... :)))
வித்தியாச அனுபவம்.! வாழ்த்துகள் கிர்பால்.!
Hi da,
Uzoo here..Good da...Children of heaven last scence came to my mind..I am happy that u are not wrote kavidhai for children like in 'pasanga' movie....Very natural kavidhai...i have a doubt whether its necessary that a kavidhai shud be dragged to narrate incidents...if u wish , explain me..
I also have a strong opinion that a kavidhai or sirukadhai shud be go to next level ...A kavidhai shud hav more dimesnions rather than being monotonous ...Here we are cliched and obessed with amma , kadhal, golden memories....Music have counter points which will give u a new feel when u listen to it.. .Does kavidhai have such things??
நல்ல குழந்தை சிந்தனை கவிதை
வாழ்த்துக்கள்
விஜய்
மழலை நிகழ்வுகள்
மலரும் நினைவுகள்..!
அது ஒரு நிலாக்காலம்..!
குழந்தையின் மனநிலையை அழகா சொல்லி இருக்கீங்க. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
நல்லா இருக்கு கிர்பால்
வெற்றியடைய வாழ்த்துக்கள்
நல்லாருக்குங்க.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
--வித்யா
தாங்கள் ஊசூவின் பின்னூட்டங்களுக்கு இன்னமும் பதிலளிக்கவில்லையென்பதை பனிவுடன் நினைவுறுத்துகிறேன்.. ;-)
Machi,
We can discuss when we met in person.....
அழகு
nammil naam tholainthaal yaar arivipaargal?
kuzhandai manam perathisayam.
all the best
padma
Post a Comment