கடவுளர் காணாமல் போகின்ற
பொன்மாலை வேளை!
ஓர் பட்டாம்பூச்சி வருவதைப் பார்க்காமல்
மலர்ச்சாலை ஒன்றைக் கடக்க முயன்றேன்!
என்னைக் கண்டு திடுக்கென்று திரும்பிய பட்டாம்பூச்சி
ரோஜாப்பூவில் மோதி விழுந்தது!
அச்சத்தில் நின்ற என்னை,
'பார்த்து வரக்கூடாதா? மோதியிருந்தால் என்ன ஆகியிருக்கும் உனக்கு?'
என்றது அன்போடு.
மன்னிப்பு கேட்டு நின்ற என்னிடம்,
(பட்டாம்பூச்சி) 'எங்கே அவசரமாக ஓடிக்கொண்டு இருக்கிறாய்?'
(நான்) 'என் தேவதையைத் தொலைத்து விட்டுத் தேடுகிறேன்'
சற்றே கோபமாகிய பட்டாம்பூச்சி,
'எத்தன பேர்றா இப்படிக் கெளம்பி இருக்கீங்க? வூட்ல சொல்ட்டு வன்டியா?' -
என்று திட்டிக்கொண்டே பறந்துவிட்டது!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//கடவுள்கள் காணாமல் போகின்ற
பொன்மாலை வேளை!//
என்னதான சொல்ற.. :-))
Thanks மச்சி..
//என்னைக் கண்டு திடுக்கென்று//
நீ மொதல்ல போய் கண்ணாடிய பாரு.. உனக்கே மயக்கம் வரும்..
//தென்படும் ஒவ்வொருவன் கண்களிலும்//
அமாம் இவரு பெரிய G.D. Naidu..
கவிதை அருமை மச்சி.. ஒரு நல்ல தலைப்பை வைக்கவும்.. :-))
ஹா ஹா. நல்லா இருக்கு
அனுஜன்யா
Post a Comment