Saturday, November 2, 2013

இறைவனடி சேர்ந்தார் மாமா

காலையில் அம்மாவிடம் இருந்து அவசர அழைப்பு
ரமேஷ் மாமா காலைல வாந்தி எடுத்திருக்காரு
அப்படியே போய்ட்டாரு.
-சரியா கேக்கல,
இறந்துட்டார்டா.
...
...
ஹலோ, கேக்குதா?
...
...

நோய்ல படுத்த ஒடம்பு
நேரமாக்க வேண்டாம்னு
நாங்க வர்றதுக்குள்ள
இருக்கிறவங்கள வச்சு மதியம் ஒரு மணிக்கு எடுத்திட்டாங்க
மாலை அப்பா கொடுத்த தகவல்.
சே,
செத்தாலும் பண்டிகை அன்னிக்கு சாகக் கூடாது.

இருபது வருடங்களாக அவர் பட்ட வேதனை
இன்றோடு முடிந்தது
மாமா கேட்ட சாவு
ஒரு வழியாக இன்று வந்து சேர்ந்தது
என்னிடம் கண்ணீர் இல்லை,
மனதில் சோகம் இல்லை,
லேசாக ஏதோ ஒரு பாரம்.
தாத்தாவை நினைத்துக் கொண்டேன்.
டாக்டர் ஹாரூன் பிள்ளைக்குத் தகவல் சொல்லி
ஒரு நன்றிக் கடிதம் அனுப்பினேன்.


http://kirpalwonders.blogspot.com/2008/06/blog-post.html

2 comments:

கிர்பால் said...

http://kirpalwonders.blogspot.com/2008/06/blog-post.html

கிர்பால் said...

இன்று காலை பவானி ஆற்றில் மாமாவின் ஆஸ்தியைக் கரைத்து விட்டு வந்ததாக அப்பா சொன்னார். என் உடலைக் உலுக்கிக் கொண்டு சட்டென்று எங்கிருந்தோ வந்து கண்களின் ஓரம் முட்டி நின்றது ஒரு துளி கண்ணீர்.