Saturday, November 3, 2012

அவசரம், தயவுசெய்து அதற்கோர் பெயரிடுங்கள்

அது -

'செல்பேசி'
   - செல்லும்போது மட்டும்தான்
   பேச முடியுமா?
   அல்லது 'செல்' என்பது
   விரியும் அலைவரிசையின் எல்லைக்கோட்டைக் குறிக்கிறதா?
   இருந்தாலும்-
   தமிழில் பதம் வேண்டும்.

'செல்லிடைப்பேசி'?
   - 'இடை' கவர்ச்சிக்கு சேர்க்கப் பட்டதாக்கும்?
   வேறு?

'செல்லிடப்பேசி'?
   -ம்ம்ம்...
   செல்லும் இடமெல்லாம் பேசும் கருவியா?
   அல்லது
   செல்லும் இடத்தைப் பற்றி பேசும் கருவியா?
   கொஞ்சம் பொருந்தினாற் போல்  இருந்தாலும்
   முழுதும் ஒட்டவில்லை!

'செல்போன்'    - மன்னிக்கவும்
   'பஸ்'சைப் பேருந்தாக்கும் முயற்சியே
   இன்னும் தீரவில்லை
   எங்களுக்கு!
   தயவு செய்து தமிழில்,

'கைப்பேசி'?
   - தோள்பட்டைக்கும்
   காதுக்கும் இடையில்
   கவ்விக் கொண்டு
   கைகளில் கரண்டி பிடிக்கும்
   அம்மாக்களைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கு - அது
   பெயர்ப்பொருள் உணர்வது கடினம்
   வேறொரு பெயர்?

 'அலைபேசி'?
   - 2 G கருவிக்கு 'அலைபேசி' என்றால்,
   3G கருவிக்கு 'அலையோஅலைபேசி'யா?
   சொற்களை முன்பின் இட்டுப் பார்த்தால் கூட
   பேசி அலைபவனைக் குறிக்கிறதே!
   வினையாகு பெயரா?
   வினையெச்சமா?
   ஐயோ, குழப்பாதீர்கள்.

ச்சே!
அன்றாடம் பயன்படுத்தும்
ஒரு கருவி - இதை
ஒரு தமிழனே கண்டுபிடித்து
'கிணிங்கிணி' என்று
பெயரிட்டு இருந்தாலும்
தேவலாம்!

   தயவுசெய்து
   நறுந்தமிழில்  
   பொருள் உணர்த்தும்
   ஒரே ஒரு பெயரிடுங்கள் - சீக்கிரம்
   உடனடியாக
   இளந்தமிழுக்கு
   ஒரு
   உபயமிடுங்கள்!

   உங்களுக்கு என்
   அடுத்த வேண்டுகோள்
   'ஸ்மார்ட் போன்'
!!!('அதிமேதாவியிடைபேசி?!!')

1 comment:

iK Way said...

திரு. கிர்பால்,
சிறப்பான ஆக்கம், எழுத்து, பகிர்வு.
இதனை படித்ததும் ஓர் இனிய வியப்பு.
இந்த அளவிற்கு சிறப்பாக இல்லாவிட்டாலும், நானும் ஒரு முயற்சி செய்திருக்கிறேன். இங்கே :

http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com/2012/08/roundaana-1.html