Wednesday, October 7, 2009

அவள் வரவு

கருநீல வானில் வெள்ளை நிலா
மேகத்தில் தொங்கிக் கொண்டு
பென்டுலம் போல்
இடமும் வலமும் ஆடிக்கொண்டு இருந்தது...

ஆட்டத்தின் வேகம் பெருகிப்பெருகி
கீழே விழுந்தது!
சூரிய வெளிச்சமாய்
வான வேடிக்கை வெடித்தது
வண்ணவண்ணமாய்!

உறக்கம் கலைந்து
விழித்தெழுந்தேன்,
என்றும் காணக்கிடைக்காத காட்சியாய்
கண்முன் பறந்து சென்றன
ஒரு ஜோடிப் பட்டாம்பூச்சிகள்!

1 comment:

RaGhaV said...

நல்லா இருக்கு மச்சி.. படிக்கும்பொழுது என் கண்ணு முன்னால அதே கனவு வந்து நிக்குது..
கனவு நினைவாகட்டும்.. :-)))